சின்னசேலம் பெருமாள் கோவிலில் உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டை பூஜை



சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் சீதா லட்சுமண ஹனுமத் சமேத ராமச்சந்திர சுவாமி உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டை வைபவ நிகழ்ச்சி நடந்தது.


கோவிலில் சீதா லட்சுமண சமேத ராமச்சந்திர சுவாமி நுாதன பஞ்சலோக உற்சவ மூர்த்திகள் சிலைகளை உபயதாரர் அரவிந்தன் குடும்பத்தினர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் சிலைகள் பிரதிஷ்டை வைபவ நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, யஜமான சங்கல்பம், அங்குரார்பனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், காலசாந்தி ஆராதனம், அக்னிபிரவேசம், கோ பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு 27 வகையான திரவிய அபிேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடந்தது. மேலும், மூலவருக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பட்டாச்சார்கள் சவுந்தரராஜன், ஜெயக்குமார், விக்ரமன், திரிவிக்ரம், வெங்கட்ராமன், சீந்தர்ராஜ் ஆகியோர் வைபவத்தை நடத்தி வைத்தனர். அறங்காவலர் நிர்வாகிகள் பாண்டியன், அரசு, கலைச் செல்வி, பன்னீர்செல்வம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்