மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமுறை பின்பற்ற வேண்டும்



தாராபுரம்: மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமுறைகளை, முறைப்படி பின்பற்ற வேண்டும் என்று தாராபுரத்தில் நடந்த துறவியர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி நதிக்கரையில் அகஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமராவதி ஆரத்தி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. மதுரை ஆதினம் விஸ்வலிங்க தம்பிரான் சுவாமிகள் ஒருங்கிணைப்பில் விழா நடந்தது. நெல்லை உமையொருபாக ஆதினம், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஆகியோர், நதிகளின் புனித தன்மை பற்றி விளக்கினர். நிறைவு நாளான நேற்று துறவியர் மாநாட்டுக்கு, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நிறுவனர் ராமானந்த மஹராஜ் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் சிறப்புரையாற்றினர். ‘ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்கவும், ஆக்கிரமித்தவர்கள் மீது வழக்கு பதியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதமாற்றத்தை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமுறைகள், முறைப்படி பின்பற்ற வேண்டும். கோவில்களில் மொபைல் போன்கள் வைக்கும் இடத்தில், கட்டணம் பெற கூடாது. நதிகள் அனைத்தும் துார்வார வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்