சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் திறப்பு



சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.15 லட்சம் காணிக்கை கிடைத்துள்ளது.


சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் வைத்துள்ள 6 உண்டி யல்கள் நேற்று உதவி ஆணையர் சிவக்குமார், செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள், ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலையில் திறந்து, பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை எண்ணப்பட்டது. பேராசிரியர் கார்த்திகேயன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக, 15 லட்சத்து 68 ஆயிரத்து 489 ரூபாய் பெறப்பட்டுள்ளது. மேலும், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய 43.100 கிராம் தங்கம், 45.500 கிராம் வெள்ளி மற்றும் மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாட்டு நோட்டுகள் 24 இருந்தன. இதற்கு முன், கடந்த ஜூன் 17ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்