ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக சதுர்த்தி விழாவின், நான்காம் நாள் ஊர்வலமாக, விநாயகர் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து விழாவின் எட்டாம் நாளான செப்.12 ல், இக்கோயில் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.