திண்டுக்கல்: ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
ஆர்.எம்.காலனி வி.ஐ.பி., நகர் குபேரலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டாஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதி, நாகல்நகர் பாரதிபுரம் சாய்பாபா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர், காம்பார்பட்டி ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், அய்யாபட்டி ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், கணவாய்பட்டி சிவன் கோயில், குட்டூர் அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஒட்டன் சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதி, ரத்தினகிரீஸ்வரர் கோயில், விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய்பாபா ஞானாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பழநி முருகன் கோயில் கைலாசநாதர் சன்னதி, கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், அ.கலையம்புத்துார் கைலாசநாதர் கோயில், பொருந்தல் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் கோயில், சித்தா நகர் புது நகர் யோகேஸ்வரர் கோயில், கூத்தம்பூண்டி மார்க்கண்டேஸ்வரர் கோயில், அய்யம்பாளையம் ராஜராஜ சோழீஸ்வரர், வத்தலக்குண்டு கிருஷ்ணாபுரம் அங்காள அம்மன் கோயில் வாலகுருநாத லிங்கேஸ்வரர் சன்னதியில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தன.