பிரமாண்ட விநாயகர் சிலை மாமல்லையில் வடிப்பு



மாமல்லபுரம்: திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, மாமல்லபுரத்தில் பிரமாண்ட விநாயகர் கற்சிலை வடிவமைக்கப்பட்டது.

செங்கல்பட்டு அடுத்த, திருவடிசூலம் பகுதியில், தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 53 அடி உயர அம்மன் கற்சிலை நிறுவப்பட்டு, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் வழிபாடு கருதி, பிரமாண்ட கற்சிலை நிறுவவும், கோவில் நிர்வாகத்தினர் முடிவெடுத்தனர். பின், மாமல்லபுரம் தனியார் சிற்பக்கூடத்தில் ஆர்டர் வழங்கினர்.

சிற்பக்கலைஞர் முருகேசன் மேற்பார்வையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பாறைகல்லில் சிலை வடிக்கும் பணி தொடங்கிய நிலையில், தற்போது முடிந்துள்ளது.

வலதுபுற இரு கரங்களில் லட்டு, அங்குசம், இடதுபுற கரங்களில் தந்தம், பாசம் ஆகியவற்றை பற்றியுள்ள இடம்புரி விநாயகர் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி நாள் முதல், 48 நாட்களுக்கு, கோவிலில் தண்ணீரில் சிலையை இருத்தி, அதன்பின் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக சிற்பக்கூடத்தினர் தெரிவித்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்