மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் குவிந்தனர்



செஞ்சி:  மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்கர்கள் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11.15 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அர்ச்சனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. ஊஞ்சல் தாலாட்டின் போது கோவில் பூசாரிகளும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.  இரவு 12.10 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. எஸ்.பி. மதிவாணன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, நடைமுறை அறங்காவர் பச்சையப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அறங்காவலர்கள் ர். சென்னை, கடலூர், வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்