தியான பீட மகா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விளக்கு பூஜை



தேவகோட்டை: தேவகோட்டை அருகே திருமணவயல் உடையார் குடியிருப்பு கிராமத்தில் உள்ள தியான பீடத்தின் மேல் உள்ள மகா கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமம் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அபிராமி அந்தாதி முற்றோதல் பாடினர் . காரைக்குடி வள்ளிக் குழுவினர் பக்தி பாடல்கள் பாடினர். நேற்று காலை மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது . சிவகுடும்ப அலங்காரத்தில் மகா கணபதி அருள்பாலித்தார். சாரதா ஆஸ்ரமம் சாரதேஸ்வரி ப்ரியாம்பா வழிநடத்த ஐந்நூறு கற்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி தியான திரு விளக்கு பூஜை செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் முன்னாள் கோர்ட் அலுவலர் ராமச்சந்திரன் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர். ஐந்து வேளையும் பக்தர்களுக்கு விருந்து வழங்கினர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்