விநாயகர் சிலைகள் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை



மேட்டுப்பாளையம்: பாதுகாப்பு நலன் கருதி, பிரதிஷ்டை செய்து வைத்துள்ள விநாயகர் சிலைகளை, போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாயை வைத்து சோதனை செய்தனர்.


மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் ஹிந்து முன்னணி சார்பில், 272 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர். இது அல்லாமல் பொதுமக்கள் சார்பில், பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்துள்ளனர். பொதுமக்கள் சார்பில் வைத்த சிலைகள், இன்று பவானி ஆற்றில் கரைத்தனர். ஹிந்து முன்னணி சார்பில் வைத்துள்ள விநாயகர் சிலைகள், இன்று பவானி ஆற்றில் கரைக்க உள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி, கோவை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் விநாயகர் சிலைகள் வைத்துள்ள இடங்களையும், சிலைகளை சுற்றியும், மெட்டல் டிடெக்டர் வைத்தும், சிம்பா என்ற மோப்ப நாயை வைத்தும், போலீசார் சோதனை செய்தனர். இப்பணிகளில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா உட்பட ஐந்து போலீசார் ஈடுபட்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்