ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இரண்டாம் பிரதிஷ்டை விழா நடந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்., 15 அன்று சபரிமலை தந்தரி ஸ்ரீ கண்டரு ராஜூவரு தலைமையில் கோயிலில் இரண்டாம் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்தது. அதனை முன்னிட்டு இன்று ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு வல்லபை விநாயகர், ஐயப்பன் மஞ்சமாதா, சங்கரன், சங்கரி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார அடுக்கு தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளை செய்திருந்தனர்.