தென்திருப்பதியில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடத்தப்படும். நடப்பாண்டு, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி தயார் உடன் சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மலையப்ப சாமி, கருட கொடியுடன், கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தார். நேற்று ஸ்ரீ மலையப்ப சுவாமி, சிம்ம வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்