போடி: புரட்டாசி மாத துவக்கத்தை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர், சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத் தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன. போடி அருகே மேலச்சொக்கநாத புரத்தில் உள்ள தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னை நடந்தது.