திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே உள்ளது மிகப்பழமையான பூத நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெயருக்கு ஏற்ப கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் இன்று புரட்டாசி முதல் சனி கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுக்கு சந்தனம், பால் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூத நாராயண பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.