காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில், ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர்கள் இன்று வருகை தந்து சிறப்பு தரிசனம் செய்தனர். தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுடன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஜப்பான் சிவபக்தர்கள் சிவன்.அம்பாள்.முருகன்.விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டது பக்தர்கள் மத்தியில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள், சிவபெருமானின் திருவருளும் சனீஸ்வர பகவானின் அருள் பாலித்தார்.இதில் ஜப்பான் சிவ ஆதீனம் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.