விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு கருடசேவை உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு கருடசேவை உற்சவம் நடந்தது. இதில், உற்சவர் வைகுண்டவாச பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.