மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரிப் பெருவிழா வரும் 10ல் துவக்கம்



பகிர்க copied

மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை நடக்கிறது. 


குன்றத்துாரை அடுத்த மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்.,21 வரை, 12 நாட்கள் நடக்கிறது. விழாவில் தினமும் மீனாட்சி, லட்சுமி, ராஜராஜேஸ்வரி, அன்னபூரணி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, மகிஷாசூரமர்த்தினி மற்றும் சரஸ்வதி அலங்காரம், அம்மனுக்கு சாற்றப்படும். காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இசை, நாட்டியம், சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 


நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகள்: விழாவில் தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்ககிறார். 


1ம் நாள் - 10.10.2026 - சனிக்கிழமை  - ஸ்ரீ மீனாக்ஷி அலங்காரம்


2ம் நாள் - 11.10.2026 - ஞாயிற்றுக்கிழமை - ஸ்ரீலட்சுமி தாமரை புஷ்பம் அலங்காரம்


03ம் நாள் - 12.10.2026 - திங்கட்கிழமை - காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி அம்மன் அலங்காரம்


4ம் நாள் - 13.10.2026 - செவ்வாய்கிழமை - ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரம்


5ம் நாள் - 14.10.2026 - புதன் கிழமை - ஸ்ரீ அன்னபூரணி அலங்காரம்


6ம் நாள் - 15.10.2026 - வியாழக்கிழமை - ஸ்ரீ கஜலக்ஷ்மி அலங்காரம்


7ம் நாள் - 16.10.2026 - வெள்ளிக்கிழமை - ஸ்ரீகாமாட்சி அம்மன் சிவலிங்க பூஜை அலங்காரம்


8ம் நாள் - 17.10.2026 - சனிக்கிழமை - ஸ்ரீகாமாக்ஷி அம்மன் சிவலிங்க ஆலிங்கனம் அலங்காரம்


9ம் நாள் - 18.10.2026 - ஞாயிற்றுக்கிழமை - ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி அலங்காரம்


10ம் நாள் - 19.10.2026 - திங்கட்கிழமை - ஸ்ரீசந்தானலக்ஷ்மி அலங்காரம்


11ம் நாள் - 20.10.2026 - செவ்வாய்க்கிழமை - ஸ்ரீசரஸ்வதி அலங்காரம்


12ம் நாள் - 21.10.2026 - புதன்கிழமை - ஸ்ரீகாமாட்சி அம்மன் மாவடி சேவை அலங்காரம் ஸ்ரீஅர்த்தமேரு ஸ்ரீசக்கரத்திற்கு அஷ்டகந்தம் சாற்றுதல். நடைபெற உள்ளது. 


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்