மகாளய அமாவாசை; சேதுக்கரை கடற்கரையில் ஏற்பாடுகள் தயார்



பகிர்க copied

திருப்புல்லாணி: மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமாகும். இது முன்னோர்களுக்கு வழிபாடுகளும், தர்ப்பணம் செய்ய முக்கிய நாளாக கருதப்படுகிறது. மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் முன்னோர்கள் (பித்ருக்கள்) பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினரின் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை நிலவுகிறது. புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படும். இந்த 15 நாட்களிலும் நிறைவு நாளே மகாளய அமாவாசை ஆகும். இந்நாளில் நதிகள், கடற்கரைகள் மற்றும் வீடுகளில் முன்னோர்களுக்கு எள் தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்து ஏழை எளிய மக்களுக்கு உணவு ஆடைகள் தானம் வழங்குவது நன்மைகளையும் முன்னோர்களின் ஆசிகளையும் தரும் என்பது நம்பிக்கையாகும். இதனை முன்னிட்டு சேதுக்கரை சேதுபந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில் மற்றும் கடற்கரையில் நீராடுவதற்கு வசதியாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் மின்விளக்குகள் கடலில் பக்தர்கள் விட்டு செல்லக்கூடிய துணிமணிகளை எடுப்பதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள், மருத்துவ முகாம், குடிநீர் வசதி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்