திருப்புத்தூரில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் யானை மணி மண்டபம்



பகிர்க copied

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் இறந்த கோயில்யானை சிவகாமியின் நினைவாக கட்டப்பட்டுள்ள மணி மண்டபம் திறப்பிற்காக காத்திருக்கிறது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ‛சிவகாமி’ என்ற பெயரிலான பெண் யானை இருந்தது. சுமார் 40 ஆண்டு கோயில் பணிக்கு பின் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தது. பக்தர்களின் மனங்கவர்ந்த கோயில் யானைக்கு அறநிலையத்துறையினர் ரூ 50 லட்சம் மதிப்பில் கல்மண்டபம் கட்ட அனுமதியானது. அதன்படி கோயில் யானை தங்கியிருந்த மண்டபம் அருகில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தின் நடுவில் 7 அடி உயர யானை சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும் மண்டபம் திறக்கப்படாமல் உள்ளது.இதே போன்று 6 கோயில்களில் இறந்த கோயில் யானைகளுக்காக மணிமண்டபம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்