சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகத்துடன் பிரதோஷ வழிபாடு



பகிர்க copied

விழுப்புரம்:

விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு நந்திக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட, 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகார வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


அக்னிபுரீஸ்வரர் பஞ்சபூத பரிகார ஸ்தலம்


விழுப்புரம் அருகே சாலை அகரம் ஏரிக்கரையில், அக்னிபுரீஸ்வரர் பஞ்சபூத பரிகார ஸ்தலம் அமைந்துள்ளது. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலில் நேற்று மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நாயகரான நந்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பிரதோஷ நாயகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, நந்தி சுவாமிக்கும், மூலவருக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோவில்

விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவிலில், குரு வார பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை 3:00 மணிக்கு மூலவர் ஸ்ரீ பசுபதிஸ்வரர், ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, மூலவர் பசுபதீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பசுபதீஸ்வரர், நந்திகேஸ்வரருக்கு அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாடானை

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் மற்றும் கிராமங்களில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

பாகூர்

பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சாரியார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

திண்டுக்கல்

புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

திண்டுக்கல் ஆர்.எம்.,காலனி வி.ஐ.பி., நகர் குபேரலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

நத்தம்

கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், அய்யாபட்டி ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், கணவாய்பட்டி சிவன் கோயில், குட்டூரில் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில், ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதி, விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் கோயில், ஒட்டன்சத்திரம் ரத்தினகிரீஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

பழநி

முருகன் கோயில் கைலாசநாதர் சன்னதி, அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் உடனுறை கைலாசநாதர் கோயில், பொருந்தல் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் கோயில், புது நகர் ஞானாம்பாள் உடனுறை யோகேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

சின்னாளபட்டி

சதுர்முக முருகன் கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், வத்தலக்குண்டு அங்காள ஈஸ்வரி அம்மன் வாலகுரு நாதலிங்கேஸ்வரர், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய்பாபா ஞானலாயம் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில்

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர்,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனை,பூஜை நடைபெற்றது.

தேவகோட்டை

தேவகோட்டையில் புரட்டாசி மகா பிரதோஷத்தை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், திருக்கயிலேஸ்வரர் கோயில், ஐந்நூற்றீஸ்வரர் கோயில், வெளிமுத்தி பழம்பதிநாதர் கோயில், கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில், கவுரி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பூஜையை தொடர்ந்து பிரதோஷ நாயனார் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி, பெருவங்கூர் சாலை, சங்கரலிங்கர் சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், பெருவங்கூர் சாலை சங்கர லிங்கர் சித்தர் பீடம், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், முடியனுார், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சின்னசேலம் 


கங்காதீஸ்வரர் கோவிலில் நந்தியம்பெருமான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.



அதேபோல் தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ பூஜை நடந்தது.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்