கள்ளக்குறிச்சியில் 12 ஜோதிர்லிங்க தரிசன விழா ஆலோசனைக் கூட்டம்



பகிர்க copied

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 12 ஜோதிர்லிங்க தரிசன விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


கூட்டத்திற்கு, ஹிந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். சிவனடியார் தர்முசிங், பா.ஜ., மாநில நிர்வாகி அசோக்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் பாலசுந்தரம், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாநிலச் செயலாளர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினர். நிதி ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில், ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மனோகர் பேசுகையில், ‘7 மாநிலங்களில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் கள்ளக்குறிச்சி வி.ஏ.எஸ்., திருமண மகாலில் வரும் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள், ஒரே இடத்தில் வைத்து தரிசன விழா நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்குபெறும் பக்தர்கள் அனைவரும் 12 ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்வதுடன், அவர்களே அபிஷேகம் செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, அப்பகுதி மக்களின் அபிஷேக ஆராதனைகளுக்குப்பின், தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி சீரா தோப்பில் ஒரே இடத்தில் இந்த லிங்கங்கள் அனைத்தும் வரும் தை மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது’ என்றார். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் மதன் நன்றி கூறினார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்