திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்திய பகவானுக்கு குடம் குடமாய் அபிஷேகம்



பகிர்க copied

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியங்களால் குடம் குடமாய் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து  சிறப்பு அலங்காரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயக்கர் எழுந்தருளி மூன்றாம்  பிரகாரத்தில் வலம் வந்தனர். இதில்ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்