கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி யாக வேள்வி!



பகிர்க copied

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், பருவமழை போதிய அளவில் பெய்து நீர்நிலைகள் நிரம்பவும் வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. யாகசாலையில் வருண யாகம்,பர்ஜன்ய யாகம்,வருண ஜபம்,ருத்ர ஹோமம்,பஞ்சபூத சக்தி ஹோமம் உள்ளிட்ட வேத மந்திரங்கள் முழங்க, யாக குண்டத்தில் புனிதப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு யாகவேள்வி பூஜை நடந்தது. பூஜைகளை சஞ்சீவிசாமிகள் நடத்தி வைத்தார். யாக வேள்வியின் நிறைவாக அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் உள்ளூர் பக்தர்களும்,வெளி மாவட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்