விழுப்புரம்: லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுாரில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும், சன்னதியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சன்னதியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு அர்ச்சனையும், தீபாரதனையும் நடந்தது.