திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் இன்று 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.
மைசூர் தசரா திருவிழாவுக்கு இணையான பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், தூத்துவாரி முத்தாரம்மன், உச்சிமாகாளி அம்மன் கோயில் உட்பட 11 அம்மன் கோயில்களில் இருந்து உற்சவர் அம்மன் சப்பரங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமாவ பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விஜய தசமியன்று அம்மன் சப்பரங்கள் வீதியுலா வும், அதைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெறும்.