வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாதம் சஷ்டி நாளான இன்று, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு பால், இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் புரட்டாசி மாத சஷடி பூஜையையொட்டி, இன்று காலை சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.