பேரூரில் ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா: பேரொளி வழிபாடு



பகிர்க copied

பேரூர்: பேரூரில், ராஜராஜ சோழனின் 1041வது, சதய விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சோழ மாமன்னர் ராஜராஜ சோழனின், சதய விழா ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோயிலில் கொண்டாடப்படும். பேரூர் சதய விழா குழு சார்பில், கடந்த, 2019ம் ஆண்டு முதல், ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜராஜ சோழனின், 1,041வது சதய விழா, எட்டாம் ஆண்டாக, இயல், இசை, நாடகம் என, முத்தமிழ் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலை வகித்தார். இதில், மாலை, 6:00 மணிக்கு, ராஜராஜ சோழன் திருமேனிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, ராஜராஜ சோழன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, ராஜராஜ சோழனின் பெருமைகள் குறித்து சொற்பொழிவுகள், பரதநாட்டியம், இசைக்கச்சேரி நடந்தது. தொடர்ந்து, பேரொளி வழிபாடும், அன்னம் பாலிப்பும் நடந்தது. இதில், சதய விழா குழு சீனிவாசன், சதய விழா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்