மாகாளேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி



பகிர்க copied

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவிலில், அப்பர் இறைபணி உழவார பணி குழுவினர், நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள அப்பர் இறைபணி உழவார பணி குழுவினர் மாதந்தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் தெப்பகுளங்களில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர். இதில், கோவில் வளாகத்தில் வளர்ந்திருந்த தேவையற்ற செடிகளை அகற்றினர். பரிவார சன்னிதி கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளை மின் மோட்டார் குழாய் வாயிலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினர்.

மேலும், கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்