புத்தகரம் முத்து கொளக்கியம்மன் தேர் வெள்ளோட்டம் கோலாகலம்



பகிர்க copied

வாலாஜாபாத்: புத்தகரம் முத்து கொளக்கியம்மன் தேர் வெள்ளோட்ட விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

வாலாஜாபாத் அடுத்த, புத்தகரம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு, 28.40 லட்சம் ரூபாய் செலவில், தேர் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு வெள்ளோட்டம் நடைபெற இருந்தது. இந்த தேர் வெள்ளோட்டத்தின் போது, பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கும், தேர் சென்று வர வேண்டும் என, ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்தனர்.

கடந்தாண்டு இறுதியில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும், தேர் சென்று வர வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், புத்தகரம் கிராம மக்களின் ஒத்துழைப்பு இல்லாத உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தேர் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.

முத்து கொளக்கியம்மன் தேர் வெள்ளோட்டம் நடத்த வேண்டும் என, சில தினங்களுக்கு முன், வி.சி.க.,வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அக்.,25ம் தேதி, தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என, காஞ்சிபுரம் சப் – கலெக்டர் புவனேஷ்ராம் உறுதியளித்திருந்தார்.

அதன்படி, நேற்று புத்தகரம் முத்துக்கொளக்கியம்மன் தேர் வெள்ளோட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை, தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் தேரின் வெள்ளோட்டத்தை நேற்று துவக்கி வைத்தனர்.

தேர், புத்தகரம் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு தேர் சென்ற போது, சீர் வரிசையுடன் வரவேற்று, தீபாராதனை செய்தனர். தேர் வெள்ளோட்டம் முடிந்து, மீண்டும் முத்துக்கொளக்கியம்மன் கோவிலை வந்தடைந்தது.

இந்த விழாவின் போது, காஞ்சிபுரம் எஸ்.பி., அரவிந்த் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்