ஆறுமுக சுவாமி கோவிலில் ஐப்பசி கிருத்திகை உத்சவம்: சிறப்பு வழிபாடு



பகிர்க copied

பொதட்டூர்பேட்டை: ஐப்பசி மாத கிருத்திகையை ஒட்டி, பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி கோவிலில், இன்று சிறப்பு உத்சவம் நடந்தது.


பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலையடிவாரத்தில், வரசித்தி விநாயகர் மற்றும் ஆறுமுக சுவாமி கோவில்கள் உள்ளன. ஆறுமுக சுவாமி கோவிலில், இன்று ஐப்பசி மாத கிருத்திகையை ஒட்டி, காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொதட்டூர்பேட்டையை சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு, ஆறுமுக சுவாமி வீதியுலா சென்றார். இதேபோல், அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில், கரிக்கல் குன்றை சரித்த குமரேசகிரி மலைக்கோவில், நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவில்களிலும், நேற்று கிருத்திகை உத்சவம் கோலாகலமாக நடந்தது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்