திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்



பகிர்க copied

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று கிருத்திகை விழாவை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், பொது வழியில், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், இன்று கிருத்திகை விழா மற்றும் முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால், பொது வழியில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.


அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே, மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து வாகனங்களுக்கும், மலைப்பாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், 7 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, கிருத்திகை விழா என்பதால், மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்