நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணியில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகை விழா நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான திரவிய அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி சன்னதி ,வேம்பார்பட்டி பாலமுருகன் கோவிலிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.