பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சோதனை ஓட்டம்



பகிர்க copied

பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் கடந்த அக். 20., ல் கியர் பாக்ஸ் பழுதாகி நின்றது. அன்று முதல் ரோப் காரில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.


பழநி கோயில் சென்று வர, ரோப் கார் மூன்று நிமிடத்தில் பயன்பட்டு வந்தது. ரோப் கார் சேவை அக் 20.,ல் முக்கிய பாகமான கியர் பாக்ஸ் பழுது ஏற்பட்டது. உடனடியாக ரோப்கார் நிறுத்தப்பட்டு பக்தர்கள் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். உடனடியாக கியர் பாக்ஸை கழற்றி சரி செய்ய கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் ரோப் கார் பதிவு நிறுத்தப்பட்டது. இன்று கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு ரோப் காரில் 8 பெட்டிகளை இணைத்துள்ளனர். சோதனை ஓட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து ஒரு பெட்டிக்கு 300 கிலோ வீதம் எட்டு பெட்டிகளுக்கு 2.4 டன் எடை படிப்படியாக ஏற்றி சோதனை ஓட்டம் செய்யும் பணி நடைபெற உள்ளது. பொறியாளர்கள் சோதனைகள் நிறைவு பெற்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்