காரைக்குடி: குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா நவ.10 தொடங்கி நவ.16 வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.15ம் தேதி நடைபெறுகிறது.=
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.10 தொடங்குகிறது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தினமும் ஆறுமுக செவ்வேல் எழுந்துருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.15 மாலை 3:30 மணிக்கு ஆறுமுக செவ்வேல் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியிலும், மாலை 4.15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.15 மணி தொடங்கி 6.45 மணிக்குள் சூரசம்கார நிகழ்ச்சியும் நடைபெறும். நவ.16 திரு முழுக்காட்டும், மாலையில் திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு தங்க தேரில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்மாள் அடிகளார் தலைமையில் விழாக் குழுவினர் செய்து வருகிறார்.