திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற பரதநாட்டியமாடி மலையேறி வேண்டுதல்



பகிர்க copied

மருதமலை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வேண்டி, சிறுமி பரதநாட்டியமாடியபடி, மருதமலை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.


திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபத்தன்று, தீபமேற்றுவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், வரும், 24ம் தேதி, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற வேண்டுதல் வைக்க, ஹிந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் சரவணன் என்பவரது மகள், பிரியங்கா,16, நேற்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார். அடிவாரத்தில் உள்ள விநாயகரை தரிசனம் செய்த பின், படிக்கட்டு பாதையில், பரதநாட்டியம் ஆடியபடி, மலை மீது உள்ள கோயிலுக்கு சென்றார். அதன்பின், சுப்பிரமணிய சுவாமியிடம், திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்ற வழிவகை செய்ய வேண்டும் என, வேண்டுதல் நடத்தினார். இதில், ஹிந்து முன்னணியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்