திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஐந்தாம் நாள் தீப திருவிழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.