தஞ்சாவூர், சேங்காலிபுரம் வேத வித்துக்கள், அக்னி ஹோத்ரிகள், உபன்யாச கர்த்தாக்கள் நிரம்பி வாழ்ந்த ஊர் என்ற பெருமை உடையது. இவ்வூர் உபன்யாச சக்கரவர்த்தி என்ற புகழ்பெற்ற ஸ்ரீ அனந்தராம தீட்சுதர் பரம்பரையைச் சேர்ந்தவர் ராம தீட்சதர். பிரம்மஸ்ரீ ஸ்ரீதர் தீட்சிதர். கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் ஸ்தாபகர் விட்டல்தாஸ் மகராஜ் ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
ராம தீட்சிதர் தனது உபன்யாசத்தின் மூலம் கடந்த 70 ஆண்டுகளாக நமது பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீக வரலாறுகள், பாகவதத்தின் பெருமைகள், ராமாயணம், மகாபாரதத்தின் வரலாற்று பெருமைகள், லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமைகள், இறைவனின் அவதார பெருமைகளை தேசத்தின் பல மாநிலங்களுக்குச் சென்று உபதேசித்து பக்தர்களுக்கு வழிகாட்டி வந்தார். காஞ்சி சங்கர மடம், சிருங்கேரி மடம் போன்ற பல மடங்களின் ஆச்சாரியார்கள் இவருக்கு உபன்யாஸக சக்ரவர்த்தி, பாரத ஸிம்ஹம் எனும் பட்டங்களை வழங்கி கவுரவித்துள்ளது. கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தானில் 90 வது வயதில் பரிபூரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மரபுப்படி மரியாதை செய்தனர்.