சபரிமலையில் 6.65 லட்சம் டின் அரவணையை என்ன செய்வது? திகைக்கும் கேரள அரசு

டிசம்பர் 06,2023சபரிமலை; ஏலக்காய் விவகாரத்தில் கடந்த ஆண்டு விற்பனை செய்யாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.65 லட்சம் டின் அரவணையை மாற்றுவது தொடர்பாக அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பதால் சீசன் முடியும் வரை சன்னிதானத்திலேயே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் ஒன்றான ஏலக்காயில் விஷத்தன்மை அதிக அளவில் கலந்துள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அந்த தேதியில் ஸ்டாக் இருந்த 6.65 லட்சம் பின் அரவணை விற்பனை செய்ய தடை விதித்தது. இதை தொடர்ந்து அந்த அரவணை டின் அனைத்தும் ஒரு குடோனில் பாதுகாக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது ஏலக்காய் இல்லாமல் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரவணையை வேறு இடத்துக்கு மாற்றி அழிப்பது தொடர்பாக கேரள மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தேவசம்போர்டு உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டாலும் எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை. சில தனியார் நிறுவனங்கள் இவற்றை எடுத்துக் கொள்வதாக கூறியும் அது பற்றியும் அரசு பரிசீலிக்கவில்லை. அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் பினராயி விஜயன் நடத்தும் நவ கேரளா யாத்திரையில் அமைச்சர்கள் பிஸியாக உள்ளதால் அந்த கூட்டமும் நடைபெறவில்லை. இதனால் நடப்பு மண்டல -மகர விளக்கு சீசன் முடியும் வரை இந்த அரவணை அனைத்தும் குடோனில் தான் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது . இதன் காரணமாக தற்போது தயாரிக்கும் அரவணையை ஸ்டாக் செய்வதில் தேவசம்போர்டு சிரமப்பட்டு வருகிறது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்