சபரிமலை மண்டல பூஜை தரிசன டிக்கெட் முன்பதிவு துவங்கியது

டிசம்பர் 06,2023



தேனி, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. இந்தாண்டு மண்டல பூஜை டிச., 27ல் நடக்கிறது.
ஆனால், இணைய தளத்தில் டிச., 25 வரை மட்டும் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. இதனால் டிச., 26, 27 யாத்திரையை மற்ற தேதிகளில் மாற்ற திட்டமிட்டனர். சிலர் ஜனவரி முதல் வாரத்தில் முன்பதிவு செய்ய காத்திருந்தனர். இந்நிலையில் டிச., 26, 27 மற்றும் டிச., 30 முதல் ஜன., 13வரை தரிசனத்திற்காக முன்பதிவு செய்யும் வசதி நேற்று மாலை முதல் துவங்கியது. இதனால் பக்தர்கள் குறிப்பிட்ட தேதிகளில் முன்பதிவு செய்தனர். இதன் காரணமாக இணையதள முகவரி ஸ்தம்பித்தது. இதனிடையே தேவசம் போர்டு சார்பில் குமுளி, நிலக்கல், கன்னிமூல கணபதி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்