தென்திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்



மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில், பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 


மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் பகுதியில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டின் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி தயார் உடன் சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ மலையப்ப சாமி, கருட கொடியுடன் கோவிலின் நான்கு மாத வீதிகளின் வழியாக வலம் வந்து, பின் கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் தங்க கொடிமரத்திற்கு, சந்தனம், மஞ்சள் பால், உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, தங்கக்கொடி மரத்தில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அன்னூர் கே. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.


ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்