நவம்பர் 28,2024
சபரிமலை; கார்த்திகை 12 விளக்கு தினத்தை ஒட்டி சபரிமலையில் நேற்று தீப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. கேரளாவில் கார்த்திகை 12-ம் தேதியை 12 விளக்கு என்று அழைக்கின்றனர். இந்த நாளுக்கு பின்னர்தான் கேரளாவை சேர்ந்த அதிகமான பக்தர்கள் சபரிமலை வர தொடங்குகின்றனர். இந்த நாளில் எல்லா கோயில்களிலும் தீப அலங்காரம் நடத்துவது வழக்கம். சபரிமலையிலும் நேற்று மாலை 6:30 மணிக்கு கொடி மரத்தின் இரண்டு பக்கத்திலும் உள்ள பெரிய அடுக்கு விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் சரண கோஷம் முழக்கமிட்டனர். தொடர்ந்து கோயில் மணி ஒலிக்க தீபாராதனை நடைபெற்றது.