தினமும் ஒரு சாஸ்தா – 15; கவலை இனி இல்லை.. திப்பணம்பட்டி கைக்கொண்ட ஐயனார்



தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் அருகிலுள்ள திப்பணம்பட்டி குளக்கரையில் கைக்கொண்ட ஐயனார் அருள்பாலிக்கிறார். இப்பகுதி மக்களின் குலதெய்வமாக திகழும் இவர், பக்தரான திருமலை அளித்தத உணவை பங்குனி உத்திரத்தன்று கையால் வாங்கி உண்டதால் இப்பெயர் பெற்றார். ஆங்கிலேய ஆட்சியின் போது ரயில்வே அதிகாரி ஒருவர், திருநெல்வேலிக்கும் தென்காசிக்கும் இடையே ரயில்பாதை அமைக்க  கோயிலை இடிக்க இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அந்த அதிகாரி ஏறி வந்த குதிரை அந்த இடத்திலேயே இறந்தது. சுவாமியின் சக்தியை உணர்ந்த அதிகாரி தன் முடிவை மாற்றிக் கொண்டு உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார்.  இங்கு பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், பிரம்ம சக்தி, பாதாள பைரவி, பேச்சியம்மன், சிவன் அணைந்த பெருமாள், சுடலை மாடன், பூதத்தார் உள்ளனர்.  


தென்காசியில் இருந்து 12 கி.மீ.,


நேரம்: காலை 10:00 – மதியம் 2:00 மணி


தொடர்புக்கு: 97893 83682


அருகிலுள்ள தலம்: விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் 30 கி.மீ., 


நேரம்: காலை 6:00 – 9:00 மணி, மாலை 5:00 – 8:30 மணி


தொடர்புக்கு: 04634 – 223 457


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்