புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் குண்டு தாங்கிய அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இங்கு பொற்கலை, பூரணியுடன் அருள்புரிகிறார். இப்பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலம். ஒருநாள் இவர்களுக்கு எதிராக ஆங்கிலேயப்படை கோரிமேடு வரை வந்துவிட்டது. அப்போது பிரெஞ்சுப்படை அங்கு வராததால், வீரன் ஒருவன் தனியாக ஆங்கிலேயப்படையை தடுத்தார். பீரங்கி குண்டுகளால் தாக்கினாலும் அதை சமாளித்து போரிட்டு அவர்களை ஓட விட்டார் வீரன். போர் நடந்த இடத்தில் விசாரணை செய்த போது அந்த வீரன் பற்றிய தகவல் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தில் அய்யனார் சிலையும், குண்டுகளும் சிதறிக் கிடந்தன. அய்யனார்தான் காத்தார் என தெரிந்ததும் பிரெஞ்சுக்காரர்கள் கோயில் கட்டி கொடுத்தனர். சுவாமிக்கு ‘குண்டு தாங்கிய அய்யனார்’ என்ற பெயரும் ஏற்பட்டது. இவரை நினைத்து தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும். ஆவணியில் திருவிழா நடக்கிறது. கோயிலை சுற்றி அங்காள பரமேஸ்வரி, சப்த கன்னிமார்கள், சிவன், சிவகாம சுந்தரி, காவல் தெய்வமாக வீரபத்திரன் உள்ளனர்.
புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 10:00 மணி, மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 93454 15802, 96778 75456
அருகிலுள்ள தலம்: மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் 84 கி.மீ.,
நேரம்: காலை 7:30 - 11:00 மணி, மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98429 09880, 93814 82008.