டிசம்பர் 12,2024
சபரிமலை; சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக வனத்துறை சார்பில் அய்யன் என்ற அலைபேசி ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆப்பில் பம்பை - சன்னிதானம் ,சுவாமி ஐயப்பன் ரோடு, பம்பா - நீலிமலை - சன்னிதானம், எருமேலி . அழுதை கடவு- பம்பை, சத்திரம் - உப்பு பாறை -புல் மேடு - சன்னிதானம் ஆகிய பாதைகளில் பக்தர்களுக்கு கிடைக்கும் சேவைகள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளது. பெருவழிப்பாதை மற்றும் புல் மேடு பாதைகளில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர உதவி மையங்கள், தங்கும் வசதி, யானை தடுப்பு படை, கழிவறைகள், ஒவ்வொரு இடத்திலிருந்தும் அடுத்த தங்குமிடத்துக்கான தூரம், தீயணைப்பு, போலீஸ் உதவி மையம், எக்கோ கடைகள், குடிநீர் விநியோக மையங்கள் உள்ளிட்ட ஏராளமான விவரங்கள் இந்த ஆப்பில் உட்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். ஆன்லைன் ஆஃப்லைன் இரண்டிலும் ஆப் இயங்கும். தமிழ், மலையாளம், கன்னட . தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் விபரங்கள் இடம் பெற்றுள்ளது. பாதைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள கியூ. ஆர். கோடு ஸ்கேன் செய்தும் இந்த ஆப் டவுன்லோட் செய்ய முடியும். பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய பொது விஷயங்கள், பெரியாறு வனவிலங்கு சரணாலயத்தின் முக்கியத்துவம், சபரிமலை கோயில் தொடர்பான விபரங்கள், அவசர தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களும் இந்த ஆப்பில் உள்ளது பக்தர்கள் செல்லும் பாதைகளில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் அது பற்றிய முன்னறிவிப்புகளும் இந்த ஆப்பில் வரும். பெரியாறு புலிகள் சரணாலய மேற்கு மண்டல அலுவலகம் சார்பில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.