மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; பக்தர்கள் தரிசனம்

டிசம்பர் 30,2024



சபரிமலை; மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 


மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை அதிகாலை முதல் நெய்யபிஷேகம் தொடங்கும். மண்டல கால பூஜை முடிந்து டிச. 26- இரவு 10:00 -மணிக்கு சபரிமலை நடை அடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகர விளக்கு காலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. ஆழிகுண்டத்தில் சாம்பல் அப்புறப்படுத்தப்பட்டது. சன்னிதான சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது. இன்று மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் இல்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும். ஜன., 14-ல் மகர ஜோதி பெருவிழா நடைபெறுகிறது. பக்தர்கள் ஜன., 19 வரை தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்