கோவை; அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சந்தன காப்ப அலங்காரத்துடன் சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.