மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்



சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் நாளில் பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், மோகினி அவதாரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளில் கருடசேவை புறப்பாடு நடந்தது. விழாவில் இன்று ஐந்தாம் நாளில் பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்தில், மோகினி அவதாரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான, வரும் 19ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் பெருமாள் தேரில் எழுந்தருள்கிறார். காலை 7:00 மணிக்கு தேர் பக்தர்களால் வடம்பிடிக்கப்படுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்