போளிவாக்கம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாண விழா



போளிவாக்கம்; கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சி பாக்குப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது ஹரி ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில். இங்கு ராம நவமி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி காலை 11:00 மணியளவில் சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. பின் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திருக்கல்யாண வைபவமும், இரவு சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் போளிவாக்கம், பாக்குப்பேட்டை, இலுப்பூர், வலசை ஊராட்சிகளை சேர்ந்த பகுதிவாசிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்