மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூரில் உள்ள அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், கருட சேவை விமரிசையாக நடந்தது. திருமலை வையாவூரில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மிகப் பழமையான அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. அங்கு, ஆண்டுதோறும் சித்திரை பிரமோத்சவ விழா விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோத்சவ விழா துவங்கியது. தினமும், அம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சேஷா வாகனம் உள்ளிட்டவைகளில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று கருட சேவையையொட்டி, கோவில் வளாகத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மலையில் இருந்து பிரசன்ன வெங்கடேச பெருமாள் கீழே கொண்டுவரப்பட்டார். பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டியில், கருட சேவை விழா, திருமலை வையாவூரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நாளை திருமஞ்சனம் மற்றும் திருத்தேர் விழா நடக்கிறது.