தர்ம சம்ரக் ஷண சமிதியில் அகண்ட லலிதா சஹஸ்ரநாமம் பாரயணம்



புதுச்சேரி; புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் சித்தன்குடியில் அமைந்துள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி மற்றும் ஸ்ரீமத் ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு 1008 பக்தகோடிகள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியான ‘அகண்ட லலிதா சகஸ்ரநாம பாரயணம்’ கோலாகலமாக நடந்தது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அம்பாளின் விக்ரஹத்திற்கு ஆகம முறைப்படி பிராண பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அம்பாள் சாரம் அவ்வைத்திடலிலிருந்து ஏராளமான பக்தர்கள் சூழ தேரில் பவனி வந்து ஜெயராம் திருமண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு ஸ்ரீமத் ஆதிசங்கரர் இயற்றிய ஸ்லோகங்களுடன் துவங்கி தர்ம சம்ரக் ஷண சமிதியின் உறுப்பினர்கள் 1,008 பக்தர்கள் சேர்ந்து காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’ மற்றும் ‘அகண்ட லலிதா சகஸ்ரநாமம்’ பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தர்ம சம்ரக்ஷண சமிதியின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்