கோவை கோதண்டராமர் கோவிலில் ஜெயந்தி விழா; தெய்வப்பிறவிகளை போற்றி வழிபாடு



கோவை; ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீ சங்கர ஜெயந்தி மற்றும் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது. இதில், ‘தெய்வப்பிறவிகள்’ என்ற தலைப்பில், கோபாலவல்லிதாசன் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது: இந்து மதத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். மஹாவிஷ்ணுவின் அவதாரமாக தோன்றிய மகான் ஸ்ரீ ராமானுஜர். ஓம் நமோ நாராயணாய என்ற திருமந்திரத்தை, திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி உலகம் அறியும் படி, உரக்கக் கூறி புரட்சி செய்த மகான். ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக அவதரித்தார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதேபோல சிவபெருமானே ஆதிசங்கரராக மண்ணுலகில் அவதரித்தார் என்று, சைவத்தை பின்தொடர்பவர்கள் போற்றி வழிபடுகின்றனர். இருவரும் தெய்வப்பிறவிகளாக, பக்தர்களால் போற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு, அவர் சொற்பொழிவாற்றினார். திரளான பக்தர்கள் சொற்பொழிவை கேட்டனர். முன்னதாக, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியை ஒட்டி, கோதண்டராமர் கோவிலில் காலை 7:00 மணிக்கு, ஸ்ரீ ராமர் சன்னிதியில் சீதாராமருக்கு விசேஷ திருமஞ்சனமும், ஸ்ரீ சங்கர ஜெயந்தியை ஒட்டி காலை 7:00 மணிக்கு, வில்வ லிங்கேஸ்வரர் சன்னிதியில், விசேஷ அபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்